×

நெல்லை அருகே பேஸ்புக்கால் வந்த வினை வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.18 ஆயிரம் பறிப்பு

நெல்லை, மார்ச் 2:  செய்துங்கநல்லூர் அருகேயுள்ள ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணபெருமாள் (24). இவர் செய்துங்கநல்லூரில் கிராம சுய உதவி குழுவில் பணியாற்றி வருகிறார். இவரும் நெல்லை தாழையூத்தை சேர்ந்த இசக்கிராஜூம் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நண்பர்களாக நேரில் பார்க்காமலேயே கடந்த சில மாதங்களாக பழகி வந்தனர். இந்நிலையில் இசக்கிராஜ், கிருஷ்ணபெருமாளிடம் வாட்ஸ்அப் மூலம் தங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பதால் தாழையூத்திலுள்ள நான்கு வழிச்சாலையிலுள்ள விலக்கு அருகே வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை நம்பிய கிருஷ்ணபெருமாள் நண்பரை நேரில் பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் கடந்த 28ம் தேதி மதியம் தாழையூத்து விலக்கிற்கு வந்தார். அப்போது அங்கு வந்த இசக்கிராஜ் மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் விஜய், குமார் உள்ளிட்ட 5 பேர் வந்தனர்.

அவர்கள் அனைவரும் கிருஷ்ணபெருமாளிடம் கை குலுக்கியவாறு அவரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி ஏடிஎம் கார்டு, ஸ்மார்ட் செல்போனை பறித்துக்கொண்டனர். இதனையடுத்து இசக்கிராஜ், கிருஷ்ணபெருமாளின் ஏடிஎம் கார்டு மூலம் வங்கி ஏடிஎம் மையத்திலிருந்து ரூ.18 ஆயிரத்து எடுத்து விட்டு அனைவரும் தப்பி சென்றனர். இதுகுறித்து தாழையூத்து போலீசில் கிருஷ்ணபெருமாள் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய இசக்கிராஜ், விஜய், குமார் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Tags : knife attack ,Paddy ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்